Thursday, 12 July 2018

New Kamarajar Song For Competition 2018

Kamarajar Song 2018

காமராஜர் பாட்டுப் போட்டி 2018 - ஜுலை 

கர்ம வீரர் காமராஜர் எளிமையான மாமனிதர்
கர்ம வீரர் காமராஜர் அருமையான மாமனிதர்

எளிமையாய்  வாழ்ந்து காட்டினார்;
ஏழைக்கும் அறிவு ஊட்டினார்.
பாமரனும் படித்துப் பட்டம்
பெற்றிட அறிவு  தீட்டினார்

கர்ம வீரர் காமராஜர் எளிமையான மாமனிதர்
கர்ம வீரர் காமராஜர் அருமையான மாமனிதர்

பதவி புகழ் கிடைத்த போதும்
பணிவுடனே வாழ்ந்தவர்
பகுத்தறிவே மெய்யறிவென
பண்புடனே வாழ்ந்தவர்

கர்ம வீரர் காமராஜர் எளிமையான மாமனிதர்
கர்ம வீரர் காமராஜர் அருமையான மாமனிதர்

சமுதாயம் வாழ வாழ்ந்தவர்
சுய மேதையாகிப் போனவர்
கறுப்பு காந்தி என்று என்றும்
தமிழ் நாட்டினர் போற்றுவர்,

கர்ம வீரர் காமராஜர் எளிமையான மாமனிதர்
கர்ம வீரர் காமராஜர் அருமையான மாமனிதர்

Alveena.S/K  -  PSG Children School - Kamarajar Song Competition 2018 July.
--------------------------------------------------------------------------------
Above Rhyme is Written by her mentor especially for the competition to be held on 13-07-2018 at PSG Children School, Coimbatore.

No comments:

Post a Comment