தமிழ்ப் பாட்டு
டம் டம்... டும் டும்... கச்சேரி
காக்கா அந்தப்பக்கம் கா, கா, கா...
கிளி இந்தப்பக்கம் கீ,கீ,கீ...
குயில் மரத்தில் கூ,கூ,கூ...
கோழி கூரையில் கொக், கொக், கொக்...
பசுவும் கண்ரும் மா,மா,மா...
பதுங்கும் பூனை மியாவ், மியாவ், மியாவ்...
மேயும் ஆடு மே, மே, மே...
காக்கும் நாய் லொள், லொள், லொள்...
டம் டம்... டும் டும்... கச்சேரி
நடக்குது பார் ஊருக்குள்ளே.
No comments:
Post a Comment